Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
எமக்காக பல தியாகங்களை செய்தவர்;களின் குடும்ப பொருளாதாரத்தை கட்டியெழுப்பவேண்டிய பொறுப்பு, எங்கள் எல்லோரிடத்திலும் உள்;ளது என வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபையின் மீன்பிடி போக்குவரத்து கிராமிய அபிவிருத்தி அமைச்சின் 43 மில்லியன் ரூபாய் நிதியில் இருந்து, முன்னாள் போராளிகள், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்;களத்தினால் தெரிவு செய்;யப்பட்ட பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு, கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச சபை மண்டபத்தில் வியாழக்கிழமை (15) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 'எமக்காக பல தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் செய்தவர்களின் குடும்பங்களின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட வேண்டும. அத்துடன் மிக நீண்டகாலமாக அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் குடும்ப பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட வேண்டும். இவ்வாறு இவர்களது பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும் போது தான் அவர்களின் கீழ் தங்கி வாழும் ஏனையவர்களின் கல்வி சுகாதாரம் போன்ற விடயங்கள் சரியான முறையில் பேணப்படும்.
இவ்வாறு கிடைக்கின்ற மத்திய அரசின் நிதியுதவிகளை கொண்டு எமது பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதார நிலைகளை உயர்த்த முடியாது. மாறாக புலம்பெயர்ந்து வாழும் உறவுகளின் உதவிகளை நாங்கள் கோரியிருக்கின்றோம். அவ்வாறு அவர்களது உதவிகள் கிடைக்கும் என நாங்கள் நம்புகின்றோம். அவை நேரடியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கிடைக்க கூடிய திட்டங்களை தயாரித்து வருகின்றோம். அவை கிடைக்கும் போது நாம் அவற்றை கொண்டும் பாதிக்கப்பட்ட எமது குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும்' என தெரிவித்தார்.
தொடந்து, மாடு வளர்ப்பு, ஆடு வளர்;ப்பு, கோழிவளர்ப்பு, தையல் போன்ற வாழ்வாதார உதவிகளைத் தெரிவு செய்த 167 வரையான பயனாளிகளுக்;கு காசோலைகளும் அவற்றுக்கான உள்ளீடுகளும் வழங்கப்பட்டன. நிகழ்வில், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான வை.தவநாதன், ப.அரியரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
4 hours ago
8 hours ago
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
16 Aug 2025