2025 மே 17, சனிக்கிழமை

தமிழரசுக் கட்சி உறுப்பினர் மீது தாக்குதல்

Editorial   / 2020 மார்ச் 03 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி  பொதுச்சந்தை வர்த்தகரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினருமான கருப்பையா ஜெயக்குமார், தாக்குதலுக்கு இலக்கான நிலையில், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம், நேற்று (02) மாலை இடம்பெற்றுள்ளது.

சுயேட்சைக் குழுவைச் சேர்ந்த கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் அவரது சகோதரரும்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஆதரவாளருமே, தன்னைத் தாக்கியதாக, தாக்குதலுக்கு இலக்கான கருப்பையா ஜெயக்குமார், தனது வாக்குமூலத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பில்,  கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .