Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
George / 2016 டிசெம்பர் 08 , மு.ப. 06:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
கொழும்பிலிருந்து புதன்கிழமை(7) காலை மன்னாருக்கு வந்த சபாநயகர் கருஜயசூரிய உள்ளிட்ட குழுவினரை ஏற்றி வந்த ஹெலிகொப்டர், மன்னார் பேசாலை பற்றிமா மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் தரையிறக்கப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதனின், தந்தையாருக்கு இறுதி அஞ்சலி செலுத்த இவர்கள் வந்திருந்தனர்.
அமைச்சர்களான டி.எம்.சுவாமிநாதன், கயந்த கருணாதிலக்க ,ரவி கருணாநாயக்க,எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன்,நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டவர்கள் இந்த ஹெலிகொப்டரில் பயணித்திருந்தனர்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் குறித்த பாடசாலை மைதானத்தில் ஹெலிகொப்டர் தரையிறக்கப்பட்டதால மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
மற்றுமொரு பாடசாலை மைதானத்தில் தரை இறங்க வேண்டிய ஹெலிகொப்டர் , தவறுதலாக, பேசாலை பற்றிமா மத்திய மகா வித்தியால மைதானத்தில் தரையிறக்கப்பட்டமை பின்னர் தெரியவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
9 hours ago