2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தேர்தல் விதிமுறைகளை மதிக்காமல் செயற்படும் சிறீதரன்?

Editorial   / 2020 ஜூன் 17 , பி.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

 

தேர்தல் சட்டத்தை மீறி, நீண்ட நாள்களாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான சிறீதரனின் படம், கட்சி சின்னம், விருப்பிலக்கம் ஆகிய பதாதைகளை தாங்கியவாறு பயணம் செய்த வாகனமொன்று, பொலிஸாரால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று (16) மாலை, வவுனியாவில் இருந்து கிளிநொச்சி நோக்கி வேட்பாளரின்றி பயணித்த இந்த வாகனம், புளியங்குளம் பகுதியில் வைத்து, பொலிஸாரால் மறிக்கப்பட்டு, பதாதைகள் நீக்கப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த வாகனம் பல நாள்களாக வேட்பாளரின்றி கிளிநொச்சி மாவட்டத்தில் பயணம் செய்த போதும், கிளிநொச்சி பொலிஸார் இதுவரை நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவம் தொடர்பில் வினவுவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனைத் தொடர்பு கொள்ள முயற்சித்த போதும், அது பலனளிக்கவில்லை

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .