Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Freelancer / 2022 ஜூன் 15 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, தேவிபுரம் காட்டுப்பகுதியில் சட்டவிரோத மரக்கடத்தலில் ஈடுபட்டுவரும் கும்பல், கால்நடைகளையும் இறச்சிக்காக கடத்தியுள்ளமை அம்பலமாகியுள்ளதுடன், இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.
கிராம அபிவிருத்தி சங்கம், பொலிஸார், கிராம குழுக்கள் அனைவரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அறுக்கப்பட்ட மரங்களும் மீட்கப்பட்டுள்ளன. மேலும், இதன்போது களவாடப்பட்ட இரண்டு கால்நடைகளும் மீட்கப்பட்டுள்ளன.
தேவிபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மரம் அறுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவர்கள், மக்களின் கோழிகள், கால்நடைகளை களவாடி இறச்சிக்காக விற்பனை செய்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கால்நடையினை களவாடிய சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்களை, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றார்கள். (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
28 minute ago
2 hours ago
3 hours ago