Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குக்குட்பட்ட பல இடங்களில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, கோடா உற்பத்தி, கசிப்பு உற்பத்தி மற்றும் கசிப்பு விற்பனை என்பவற்றில் ஈடுபட்ட ஒன்பது பேரை கைது செய்துள்ளதாக, முள்ளியவளை பொலிஸ் நிலைய மது ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர், ஜே.ஜெயரோஷன் புதன்கிழமை (14) தெரிவித்தார்.
முள்ளியவளை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி ஆர்.கே. ரத்னசிங்கத்தின் ஆலோசனைக்கமைய, முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கேப்பாப்பிலவு, முறிப்பு, மாமூலை, பூதன்வயல், முள்ளியவளை 4ஆம் வட்டாரம் ஆகிய பிரதேசங்களிலேயே, குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.
குறித்த பிரதேசங்களில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திகள் மேற்கொள்ளப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், இந்த சுற்;றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்போது, கசிப்பு மற்றும் கோடா உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.
இந்தச்சுற்றி வளைப்பின் போது, கேப்பாப்பிலவு நந்திக்கடலோரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் வைத்து, கோடா உற்பத்தி செய்த ஐவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து 48ஆயிரம் மில்லி லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் முறிப்பு, மாமூலை, பூதன்வயல், முள்ளியவளை 4ஆம் வட்டாரம் ஆகிய பிரதேசங்களில், நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில், கேப்பாப்பிலவு நந்திக்கடல் பிரசேத்தில் வைத்து கைது செய்யப்பட்ட மூவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், அம்மூவரையும் 5 இலட்சம் ரூபாய் சரீரப்பிணையிலும் 25ஆயிரம் ரூபாய் ரொக்கப்பிணையிலும் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
அத்துடன், கைது செய்யப்பட்ட ஏனையவர்கள், பொலிஸ் பிணையிலேயே விடுவிக்கப்பட்டனர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
4 hours ago
8 hours ago
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
16 Aug 2025