Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2023 மே 15 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா பிரதேசத்தில் அமைந்துள்ள பிள்ளையார் கோவில் ஒன்றில் நடராஜர் சிலையை திருடியதாக கூறப்படும் இராணுவ வீரர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் சிலையை திருடி விற்பனைக்காக பையில் கொண்டு செல்லும்போது வேன் சாரதிகள் குழுவினால் பிடிக்கப்பட்டு தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அப்பகுதியிலுள்ள பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அக்கராயன்குளம் இராணுவ முகாமில் கடமையாற்றும் 21 வயதுடைய இராணுவ சிப்பாய் ஆவார். திருடப்பட்ட சிலையின் மதிப்பு 55,000 ரூபாய் என கோவிலின் பூசாரி பொலிஸாரிடம் கூறியுள்ளார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago