Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2021 நவம்பர் 17 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ. கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்
மாவீரர்களின் தியாகங்களை நினைவிற்கொள்வது இதயசுத்தியுடன் கடைப்பிடிக்க வேண்டி எழுச்சிநாள் எனத் தெரிவித்த ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர், இந்த நாளை அரசியலுக்காகவோ ஏனைய தேவைகளுக்காகவோ தனிப்பட்ட சொந்த நலன் சார்ந்த விடையங்களுக்காகவோ யாரும் பயன்படுத்துவதை அனுமதிக்கமாட்டார்கள் எனவும் கூறினார்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில், இன்று (17) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், உண்மையில், மாவீரர் நாள் தொடர்பாகவோ தமது விடுதலைப் போராட்டங்கள் தொடர்பாகவோ சம்பந்தப்படாத தரப்புகள் தீர்மானங்களை நிறைவேற்றுவது அனுமதிக்க முடியாது என்றார்.
இந்த நிலைமை தொடருமாக இருந்தால், பெரும் அணிகளாக திரண்டு, ஆயர் இல்லங்களுக்கு எதிராக பலமான எதிர்ப்புகளை கொடுப்பதாக மாவீரர்களின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளார்கள் எனவும், கதிர் கூறினார்.
தயவு செய்து மதம் சார்ந்த விடயங்களுக்காக, வீரர்களின் நினைவுநாளில் மாற்றம் செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமெனத் தெரிவித்த அவர், தயவு செய்து, ஏனைய செயற்பாட்டாளர்களாக இருந்தாலும் சரி, மாவீரர் நாள் தொடர்பில் தேவையற்ற முடிவுகளை தீர்மானிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.
மாவீரர்களை நினைவுகூருவதை யாராலும் தடுக்கமுடியாது. அந்தத் தடைகளை உடைத்துக்கொண்டு நினைவு நாளை கடைப்பிடிக்க முடியுமானால், அது தொடர்பில் அனைவரும் ஒன்றாக முடிவெடுத்து செயற்பட வேண்டும். இல்லையேல், எங்கள் மாவீரர்களுக்கான அஞ்சலியை இதயசுத்தியுடன் நேர்மையாக எமது இல்லங்களில் அவர்களுக்கு விழக்கேற்றி அகவணக்கம் செலுத்துவது சிறந்தாக அமையும்" என்றார்.
அரசாங்கத்துடன் இது தொடர்பில் பேச்சுக்களில் ஏதும் ஈடுபட்டுள்ளீர்களா என ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், கடந்த ஆட்சியில் இருந்தவர்களிடமும் தற்போதைய பிரதமர், ஜனாதிபதி ஆகியோருடன் அரசியல் ரீதியில் தங்கள் மக்கள் நிலைப்பாடு தொடர்பில் பேசியுள்ளதாகவும் அந்த காலத்தில் மாவீரர் நினைவு தொடர்பில் முக்கிய விடயங்களை தாங்கள் முன்வைத்துள்ளதாகவும் கூறினார்.
"நாங்கள் நினைக்கின்றோம்; இந்த மண்ணில் இந்த அரசாங்கத்துக்கும் அரச படைகளுக்கு எதிராகவும் போரா இந்தமண்ணில் மரணித்த மாவீரர்களுக்கான அங்கிகாரத்தை இலங்கை அரசாங்கம் தருவது நடைமுறைக்கு சாத்தியமான விடயமாக தெரியவில்லை. அந்த அங்கிகாரம் என்பது தமிழர்களுக்கு தனிநாட்டு அங்கிகாரமாக அமைந்து விடலாம் என்ற அச்ச உணர்வு அவர்களுக்கு இருக்கின்றது," என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
53 minute ago
57 minute ago