Editorial / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு, நந்திக்கடல் பகுதியில் மீன்கள் இறப்பினால் தொழில் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கான நிவாரண உதவிகளை மத்திய அரசிடம் இருந்தே பெற வேண்டியுள்ளது. இதுதொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு தெரியப்படுத்தி வருவதாக வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வரட்சி காரணமாக, நந்திக்கடல் பகுதியில் பெருந்தொகையான மீன்கள் இறந்து கரையொதுங்கியமையால் குறித்த கடற்பகுதியில் தொழில் செய்து வந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தொழில் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த வருடமும் இவ்வாறான பாதிப்பு ஏற்பட்டமையால் தமது தொழில்கள் பாதிக்கப்பட்டன என்றும் இவ்வாறு பாதிக்கப்பட்ட தமக்கு நிவாரண உதவிகளைப் பெற்றுத்தருமாறும், இதற்கு மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, நந்திக்கடல் பகுதியில் மீன்கள் இறப்பது என்பது தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதுடன், கடந்த 3 வருடங்களாக வரட்சி ஏற்படுவதும் ஒரு காரணம் இவ்வாறான பிரச்சினையை தீர்ப்பதற்கு நந்திக்கடலுக்கு குறுக்காக அணை ஒன்றினை அமைப்பதன் மூலம் இதற்கான தீர்வை பெற்றுக்கொள்ளலாம் என்றும் நந்திக்கடலை நம்பி வாழ்ந்து இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மீனுவர்களுக்கான நிவாரண உதவி என்பது நாங்கள் மத்திய அரசிடம் இருந்து தான் பெறவேண்டியுள்ளதெனவும் தெரிவித்ததுடன், நிச்சயமாக இது சம்பந்தப்பட்ட விடயங்களை சம்பந்தப்பட்டதரப்பினரிடம் தெரியப்படுத்துவோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
3 hours ago
3 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
8 hours ago