2025 மே 06, செவ்வாய்க்கிழமை

நீண்ட நாட்களின் பின் மன்னாரில் மண்ணெண்ணெய்

Princiya Dixci   / 2022 மே 29 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார்- பள்ளிமுனை வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்று (29) காலை மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டது.

அதிகாலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மண்ணெண்ணெய்யை பெற்றனர்.

குடும்ப அட்டையின் அடிப்படையில் ஒரு குடும்பத்திற்கு 500 ரூபாய்க்கு மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகின்றது. குடும்ப அட்டைகள் வழங்கப்படாத, இல்லாத நபர்களுக்கு கிராம சேவகர்களின் உறுதிப்படுத்தலின் பின்னர்  மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது.

மண்ணெண்ணெய் விநியோகத்தில் முரண்பாடுகள் தோற்றம் பெறாத வகையில் செயற்பாடுகளை மேற்கொள்ள மன்னார் பிரதேச செயலாளரால் அப்பகுதியில் கடமையாற்றும்  சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம சேவகர்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அழைக்கப்பட்டு, அவர்களால் எரிபொருள் விநியோகம் மேற்பார்வை செய்யப்பட்டது.

மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டனர்.

இவ்வாறு மன்னார் மாவட்டத்தில் நீண்ட நாட்களின் பின்னர் இன்று மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X