Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 20 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி - அக்கராயனில் நூலகம் ஒன்றினை உருவாக்குவதற்கான முயற்சிகளில் கிராம அலுவலர் மற்றும் பொது அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.
1996ஆம் ஆண்டு கிளிநொச்சி இடம்பெயர்வின் போது நகரத்தின் அனைத்துக் கட்டுமானங்களும் அக்கராயன், ஸ்கந்தபுரம் கிராம அலுவலர் பிரிவுகளில் இயங்கின.
கரைச்சி பிரதேச சபையின் நூலகம் அக்கராயனில் இயங்கியது. 2000ஆம் ஆண்டு கிளிநொச்சி நகருக்கு மக்கள் மீள குடியமர்ந்த போது நூலகம் உட்பட அனைத்து திணைக்களங்களும் கிளிநொச்சியில் இயங்கத் தொடங்கி விட்டன.
கரைச்சி பிரதேச சபையின் நூலகம் கிளிநொச்சிக்கு நகரும் போது, அக்கராயனில் நூலகம் ஒன்றினை அமைப்பதாக வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும், இதுவரை அவை நடைபெறாத நிலையில் அக்கராயன் மகா வித்தியாலயம், அக்கராயன் ஆரம்ப வித்தியாலயம் ஆகிய மாணவர்களின் நன்மை கருதியும் கிராம மக்களின் பத்திரிகை வாசிக்கும் ஆவலுக்கு வழி சமைக்கும் வகையிலும் அக்கராயனில் நூலகம் ஒன்றை விரைவாக அமைப்பதற்காக பொதுக் கட்டடம் ஒன்று இனங்காணப்பட்டுள்ளது.
விரைவாக நூலகம் அமைக்கப்பட்டு பத்திரிகைகள், நூல்கள் வாசிக்கக் கூடிய சூழல் உருவாக்கப்படவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
22 minute ago
29 minute ago
32 minute ago