2025 மே 05, திங்கட்கிழமை

நெடுந்தீவு கடற்பரப்பில் மர்ம பொதி

Freelancer   / 2022 ஜூன் 02 , பி.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்சன் வினோத், எம்.றொசாந்த் 

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 35 போத்தல் பூச்சிகொல்லி மருந்து நேற்று கடற்படையினரால் மீட்கப்பட்டது.

நெடுந்தீவு கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று மிதந்து வருவதை அவதானித்த கடற்படையினர், அதை சோதனையிட்டபோது அதில் பூச்சிக்கொல்லி மருந்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கடத்தல்காரர்கள் இந்தியாவிலிருந்து குறித்த பூச்சிகொல்லி மருந்துகளை கடத்திய நிலையில் கடற்படையினரை கண்டதும் குறித்த மருந்து போத்தல்களை கடலில் வீசிவிட்டு தப்பிச் சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் கடற்படையினர் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X