2025 நவம்பர் 05, புதன்கிழமை

நெல்லை உலர வைத்து கொண்டுவரவும்

Freelancer   / 2023 ஜனவரி 13 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

 கிளிநொச்சி, கனகாம்பிகை குளத்தில் அமைந்துள்ள   மாவட்டத்துக்கான  தானியக் களஞ்சியசாலையில் மண்ணெண்ணெய் விலையேற்றம் காரணமாக நெல்லை சுத்தப்படுத்தி, களஞ்சியப்படுத்துதற்கு அதிக செலவாகும் என்பதால், விவசாயிகள் அறுவடை செய்யும் காலபோக நெல்லை, உலர வைத்து கொண்டுவருவதன் மூலம், சுத்தப்படுத்தி களஞ்சியப்படுத்த முடியும் என களஞ்சிய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.  

குறித்த தானியக் களஞ்சியத்தில் நெல்லை உலர வைப்பதற்குரிய இயந்திரத்துக்கு  மண்ணெண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகின்ற  நிலையில், தற்போது மண்ணெண்ணெய்  லீற்றர் ஒன்றின் விலை 365​ ரூபாயாக காணப்படும்  நிலையில், நெல்லை உலர  வைப்பதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது.                                            

எனவே,  கிலோ கிராம் ஒன்றுக்கு எட்டு ரூபாய்க்கு மேல் செலவாகும் என்பதால், விவசாயிகள் நெல்லை உலர வைத்து கொண்டு  வரும் போது அவற்றைக் களஞ்சியப்படுத்த இலகுவாக இருக்கும்  என தானிய களஞ்சிய முகாமையாளரால்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X