2025 ஜூலை 09, புதன்கிழமை

பூந்தோட்டம் மகா வித்தியாலயத்தில் கேட்போர் கூடம் திறந்து வைப்பு

Menaka Mookandi   / 2017 ஜனவரி 06 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

வவுனியா, பூந்தோட்டம் மகா வித்தியாலயத்தில் இன்று (06) கேட்போர் கூடம் திறந்து வைக்கப்பட்டது.

கல்வி அமைச்சினால் ஒதுக்கப்பட்ட நிதியில் அமைக்கப்பட்ட பிரதான கேட்போர் கூடமே, பாடசாலையின் அதிபர் திருமதி கி.நந்தபாலன் தலைமையில், வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தால் திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது, பாடசாலைக்கென வரவேற்பு கீதம் இயற்றப்பட்டு இறுவெட்டும் வெளியிட்டு வைக்கப்பட்டிருந்தது.

இதன்போது, வவுனியா தெற்கு கல்வி பணிப்பாளர் மு.இராதாகிருஸ்ணன், கேட்டக்கல்வி அதிகாரி எம்.பி.நடராஜா உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .