2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

பிரமந்தனாறு குளத்தின் அணைக்கட்டு புனரமைப்பு

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 17 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி மாவட்டத்தின் பிரசித்திபெற்ற குளங்களில் ஒன்றான பிரமந்தனாறு குளத்தின் அணைக்கட்டைப் புனரமைக்கும் பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன.

பிரமந்தனாற்று வடிநிலத்துக்கு குறுக்காக அணைக்கட்டை உருவாக்கியே பிரமந்தனாற்றுக் குளம் உருவாக்கப்பட்டது. இக்குளத்திலிருந்து பெறும் நீர்ப்பாசனத்தின் மூலம் 600 ஏக்கர் பரப்பளவில் மிளகாய், நிலக்கடலை, வெங்காயம் போன்ற பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகிறது.

காற்றின் வேகம் அதிகமாக உள்ள பகுதியாக இப்பிரதேசம் காணப்படுவதால் வேகமான அலையடிப்பால் அணைக்கட்டு அரிப்புக்குள்ளாகியிருந்த நிலையிலேயே தற்போது புனரமைப்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இந்த அணைக்கட்டைப் புனரமைப்பதற்கு விவசாய அமைச்சின் நிதியில் இருந்து 9 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுவரும் இப்புனரமைப்புப் பணிகளின் முன்னேற்றத்தை வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், கல்வி அமைச்சர் த.குருகுலராஜா ஆகியோர் புதன்கிழமை (16) சென்று பார்வையிட்டுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .