2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

புலமைப்பரிசில் பரிட்சையில் சித்திபெற்றவர்கள் கௌரவிப்பு

Kogilavani   / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு தண்ணீரூற்று பிரதேசத்திலுள்ள தமிழ்த்தாய் கல்வி நிலையத்தில் கல்வி கற்று, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரிட்சைக்கு தோற்றி சித்திபெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு திங்கட்கிழமை குறித்த கல்வி நிiலைய வளாகத்தில் இடம்பெற்றது.

இந்நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கமலநாதன் விஜிந்தனின் தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தண்ணீரூற்று ஊற்றங்களை ஆலய குருக்கள் இராமசாமி ஐயர் பத்மகுமார், கூழாம்முறிப்பு பங்குத்தந்தை அருட்பணி வின்சன் மற்றும் நீராவிப்பிட்டி ஜூம்ஆப்பள்ளிவாயல் பேஷ் இமாம் மௌலவி ஏ.சி.எம்.அஸ்லம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இக்கல்வி நிலையத்திலிருந்து தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய 18 மாணவர்களுள் 18 மாணவர்கள் சித்திபெற்றுள்ளதுடன் 12 மாணவர்கள் 100க்கும் மேலதிகமான புள்ளிகளை பெற்றுள்ளனர்.

கல்விகற்று ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுள் 18 மாணவர்கள் சித்திபெற்றுள்ளதுடன், 12 மாணவர்கள் 100 இற்கும் கூடுதலான புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

இம்மாணவர்கள் உள்ளிட்ட சமயத் தலைவர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டதுடன் மதத்தலைவர்கள், கல்விமான்கள் மாணவர்களுக்கு தமிழ்தாய் கல்வி நிலையத்தினால் நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.

இதேவேளை, குறித்த மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர்களான பா.குணபாலன், ம.மயூரன், த.தவயோகினி ஆகியோருக்கும் நினைவுப் பரிசில்கள் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .