2025 ஜூலை 09, புதன்கிழமை

பசு மாடுகள் வழங்கி வைப்பு

George   / 2017 ஜனவரி 06 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-கே.கண்ணன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

வவுனியா பகுதியில் வசிக்கும் பின்தங்கிய குடும்பங்களுக்கு இராணுவத்தினரால் பசு மாடுகள் வழங்கப்பட்டுள்ளது.

நுகேகொட ஸ்ரீ தம்மாராம விகாராதிபதி யூ.கேபோகம்பேதேரரின் நிதியுதவியுடன், வவுனியா மாவட்ட இராணுவ படைத் தலைமையகத் ஏற்பாட்டில், வவுனியா மாவடத்தில் உள்ள நந்து மித்தகம கிராமத்தில்   பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக நல்லின பசு மாடுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வு புதன்கிழமை (04) நந்துமித்தகம கிராமத்தில் வவுனியா மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் றுவான் குலதுங்க தலைமையில் நடைபெற்றுள்ளது.

பொருளார ரீதியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பத்து குடும்பங்களுக்கு இந் நல்லின பசு மாடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .