2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பணிமனைக்கு முன்னால் குவிந்த சுகாதாரத் தொண்டர்கள்

Editorial   / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

புதிய விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்வதற்காக, வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள், வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்னால், இன்று (16) காலை குவிந்திருந்தனர்.

வடக்கு மாகாணச் சுகாதாரப் பணி உதவியாளர்கள் 454 பேரை நியமிப்பதற்காக, இடம்பெற்ற நேர்முகத் தேர்வுகளின் பெறுபேறுகளை, இரத்து செய்யுமாறு உத்தரவிட்டிருந்த வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன்,  இந்த வெற்றிடத்துக்கு தோற்றிய 1,923 பேருக்கும் மீண்டும் நேர்முகத் தேர்வை நடத்துமாறும் பணிப்புரை விடுத்திருந்தார்.

இதற்கமைய, அதற்கான விண்ணப்பப் படிவங்கள், வவுனியா பிராந்திய சுகாதாரச் சேவைகள் பணிமனையால், இன்று (16) வழங்கப்பட்டன.

 இந்த விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுகொள்வதற்காகவே, நூற்றுக்கணக்கான சுகாதாரத் தொண்டர்கள், இன்றுக் காலை முதல் வவுனியா பிராந்தியச் சுகாதாரச் சேவைகள் பணிமனைக்கு முன்பாகக் குவிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X