2025 ஜூலை 09, புதன்கிழமை

பயிர் செய்கை நிலங்கள் மேட்டுக்காணிகளாக்கப்படுகின்றன

George   / 2017 ஜனவரி 06 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நீர்ப்பாசன வாய்க்கால்கள், பயிர் செய்கை நிலங்கள் என்பன மண் போட்டு நிரப்பப்பட்டு வருவதனால், பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படுவதாக விவசாய அமைப்புக்கள் குற்றம்சாட்டியுள்ளன.

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழான பயிர் செய்கை நிலங்களில் கூடுதலான வயல் நிலங்கள் கடந்த காலங்களில் மண்போட்டு நிரப்பப்பட்டு மேட்டுக்காணிகளாக மாற்றப்பட்டுள்ளன.

குறிப்பாக, பரந்தன் சந்திக்கும் கரடிப்போக்குச் சந்திக்கும் இடைப்பட்ட ஏ-9 வீதிக்கு அருகிலுள்ள காணிகள், இவ்வாறு மண் போட்டு நிரப்பப்பட்டு மேட்டு நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, மருதநகர் பன்னங்கண்டி ஆகிய பகுதிகளிலும் இவ்வாறு வயல் நிலங்கள் மேட்டுக்காணிகளாக  மாற்றப்படுகின்றன.

கிளிநொச்சி குளத்துக்கான நீரைக்கொண்டு வரும் கனகாம்பிக்கைகுளம், இரனத்திபுரம் ஆற்றுப்பகுதியின் கரையோரப்பகுதி மண் போட்டு நிரப்பப்பட்டு அத்துமீறிப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இதனால், ஆற்றின் நீர்க் கொள்ளளவு குறைவடைந்து பருவமழை காலங்களில் வெள்ளப்பாதிப்புக்கள் ஏற்படுகின்றன” என்று அந்த  அமைக்புகள் குறிப்பிட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .