Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Freelancer / 2022 ஜூன் 28 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு மாவட்டத்தில் உப உணவு பயிர்ச் செய்கையில் ஈடுபடுவதில் விவசாயிகள் அக்கறை செலுத்துவதில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மாவட்டச் செயலகம், விவசாயத் திணைக்களம் என்பன தொடர்ச்சியாக உப உணவுப் பயிர்ச் செய்கையில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், விவசாயிகளினால் கட்டுப்படுத்த முடியாதளவிற்கு உப உணவுப் பயிர்ச் செய்கை குரங்குகளினால் அழிக்கப்பட்டு வருகின்றன.
மற்றும் கால்நடைகளினால் ஏற்படும் அழிவுகளும் குறிப்பிடத்தக்கவை.
ஆகவே, உப உணவுப் பயிர்ச் செய்கை காலங்களில் வேலி அடைப்பதற்கு கூடுதலான நிதி தேவைப்படுதல், தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி, இரசாயன உரம் கிடைக்காமை, சந்தை வாய்ப்பின்மை போன்ற பல்வேறு காரணங்களினால் உப உணவுப் பயிர்ச் செய்கையில் இருந்து விவசாயிகள் விலகி வருகின்றனர்.
கடந்த காலங்களில் சிறு போக நெற்செய்கை காலங்களில் உப உணவுப் பயிர்ச் செய்கையில் கூடுதலாக விவசாயிகள் ஈடுபட்டனர். இதன் போது அறுவடை செய்யப்பட்ட உளுந்து, எள்ளு போன்ற தானிய வகைகளின் விலைகள் குறைவடைந்ததன் காரணமாக இப்பயிர்ச் செய்கையில் இருந்து விவசாயிகள் ஒதுங்கும் நிலை காணப்படுகின்றது.
தற்போதும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு, துணுக்காய் பகுதிகளில் 2,000 கிலோ வரையான உளுந்து, எள்ளு என்பன நியாய விலை கிடைக்காததன் காரணமாக சேமிக்கப்பட்ட நிலையிலேயே தானியங்கள் காணப்படுகின்றன.
இந்நிலையில் குளங்களில் நீர் உள்ள போதிலும் உப உணவுப் பயிர்ச் செய்கையில் இருந்து விவசாயிகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒதுங்கி உள்ளமை காணப்படுகின்றன. (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
13 minute ago
3 hours ago
3 hours ago