2025 மே 05, திங்கட்கிழமை

பற்றி எரிந்தது சூரிய மின்உற்பத்தி நிலையம்

Freelancer   / 2022 ஜூன் 06 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன் 

வவுனியா - கள்ளிக்குளத்தில் அமைந்துள்ள சூரிய மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று இரவு 10 மணியளவில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டது.

இதன்போது அங்கு புதிதாக வைக்கப்பட்டிருந்த சூரிய ஒளி மின் உற்பத்தி உபகரணங்கள் தீப்பற்றி எரிந்தன.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

எனினும் புதிதாக பொறுத்துவதற்கென வைக்கப்பட்டிருந்த சூரிய மின்கலங்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நகரசபையின் தீயணைப்பு பிரிவுடன், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X