Freelancer / 2023 பெப்ரவரி 06 , மு.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேவிபுரம் பகுதியில், பாடசாலை மாணவர் இருவர் மீது, மதுபோதையில் பொலிசார் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து, முல்லைத்தீவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று, மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து தெரிய வருவதாவது; தேவிபுரம் பகுதியில் வியாழக்கிழமை (02) இரவு, நண்பரின் பிறந்த தின கொண்டாட்டத்துக்குச் சென்றுவிட்டு, 300 மீற்றருக்குள் இருந்த தமது வீட்டுக்கு 15 வயதுடைய பாடசாலை மாணவர்கள் இருவர் சென்றுள்ளனர்.
இதன்போது, ஓட்டோவில் வந்த புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தின் மூன்று பொலிஸ் அதிகாரிகள், மாணவர்களை மறித்து, அலைபேசிகளைப் பறித்துவிட்டு, இருவரும் போதைப் பொருள் பாவித்துவிட்டு வருகிறீர்களா எனக் கேட்டு, இருவர் மீதும் தாக்குதல் நடத்தியதாகவும் இதன்போது பொலிஸார் மதுபோதையில் இருந்ததாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
பொலிஸார் தாக்குதல் மேற்கொண்ட போது, மாணவர்கள் கத்திய சத்தம் கேட்டு பெற்றோர் வந்தபோது, பொலிஸார் குறித்த இடத்தை விட்டு தப்பித்துச் சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையம் சென்ற பெற்றோர், அங்கு அவர்களுக்கு நீதி கிடைக்காத நிலையில், மாணவர்களை புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதித்தனர். தொடர்ந்து மாணவர்கள் இருவரும், புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
இந்நிலையில், வௌ்ளிக்கிழமை (03) முல்லைத்தீவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தி முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், இதுவரை நீதியான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளவில்லை எனவும் மாறாக, பொலிசாரின் அழுத்தங்களால் வைத்தியசாலையில் இருந்து ஒரு மாணவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும் மற்றைய மாணவருக்கு எலும்பில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இன்னும் சிகிச்சையில் உள்ளதாகவும் தமக்கு உரிய தீர்வை பெற்றுத்தருமாறு கோரி மனித உரிமைகள்
ஆணைக்குழுவுக்கு பெற்றோரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. R
54 minute ago
1 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
2 hours ago
5 hours ago