2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பாலம் சேதமடைந்ததால் மக்கள் அசௌகரியம்

Editorial   / 2020 மார்ச் 12 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - உருத்திரபுரத்தையும் கனகபுரத்தையும் இணைக்கும் இணைப்பு வீதியும் அதற்கான பாலமும் உரிய முறையில் அமைக்கப்படாதல் தற்போது சேதமடைந்து காணப்படுவதால், பாடசாலை மாணவர்கள் பொதுமக்கள் எனப் பலரும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

கிளிநொச்சி - உருத்திரபுரம் சிவநகர் ஜெயந்திநகர் உள்ளிட்ட கிராமங்களையும் கனகபுரம் செல்வாநகர் புதுமுறிப்பு உள்ளிட்ட கிராமங்களையும் இணைக்கும் இணைப்பு வீதி, 2012ஆம் ஆண்டு கொங்கீரட் வீதியாக புனரமைக்கப்பட்டபோதும் இவ்வீதியைக் குறுக்கறுத்துச் செல்லும் கந்தன்குளம் ஆற்றுக்கான பாலம் உரிய முறையில் அமைக்கப்படாமல் சிறிய குழாய்களைக் கொண்டே மதகு போன்ற பாலம் அமைக்கப்பட்டிருந்தது.

வீதி புனரமைக்கப்பட்டு ஒரு வருடத்துக்குள் பாலத்தின் ஒருபகுதி உடைந்த நிலையில் காணப்பட்டதுடன், இதனூடாக ஆபத்தான நிலையில் மக்கள் தமது பயணங்களை மேற்கொண்டு  வந்தனர்.

கடந்த ஆண்டின் இறுதியில் பெய்த மழை வெள்ளம் காரணமாக, எஞ்சியிருந்த பாலமும் உடைந்துள்ள நிலையில் குறித்த வீதியூடான போக்குவரத்துகள் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளன.

இதனால் மேற்படி கிராமங்களிருந்து பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களும் பல்வேறு தேவைகள் கருதி பயணிக்கும் பொதுமக்களும் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் நீணடதூரம் பயணித்து மாற்றுப்பாதைகளை பயன்படுத்தி போக்குவரத்துகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே, குறித்த வீதியில் சேதமடைந்துள்ள பாலத்தைப் புனரமைத்துத் தருமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .