Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 பெப்ரவரி 26 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே, தன்னுடைய தெய்வமெனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், அவர் மேல் வைத்த பாசமும் பற்றுமே, தன்னை அரசியல்வாதி ஆக்கியதெனவும் கூறினார்.
வவுனியா - கோவில்குளம் கண்ணன் கோவிலின் முகப்பு நுழைவாயிலை, இன்று (26) திறந்துவைத்து உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், தமிழர்களை அழிப்பதற்கு தமிழர்களுக்கு உள்ளேயே பல கட்சிகளை உருவாக்கி, முரண்பாடுகளை உருவாக்கி, பிரிவினையை ஏற்படுத்தும் செயற்பாடுகளே தற்போது வேகமாக இடம்பெற்று வருகின்றனவெனத் தெரிவித்தார்.
அத்துடன், திருக்கேதீஸ்வர வளைவு விடயத்தில் இரு தரப்புடனும் தான் கதைத்திருப்பதாகத் தெரிவித்த அவர், முரண்பட்டுத் தமது தனித்துவத்தை சவாலுக்குட்படுத்தாமல், பேசித் தீர்குமாறு, அவர்களிடம் தெரிவித்ததாகவும் கூறினார்.
மேலும், அன்று, தமிழ் மக்களிடம் இருந்த ஒற்றுமையைக் கண்டு வந்த பயம், இன்று எந்தவோர் அரசாங்கத்துக்கும் இல்லையெனவும் இதனால், தமது பலம் குறைந்துகொண்டே போகிறதெனவும், சார்ள்ஸ் எம்.பி கூறினார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago