Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 பெப்ரவரி 10 , மு.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ. சக்தி
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவருக்கும், தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் (08) இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், இரா.சாணக்கியன், கலையரசன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது, எதிர்வரும் காலங்களில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் உதவிகளை, எவ்வாறு தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு உதவும் வகையில் வழங்க முடியும் என்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில், இலங்கைக்கான பிரான்ஸின் துணை தூதுவரும் பங்கேற்றிருந்தார். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .