2025 மே 16, வெள்ளிக்கிழமை

புதையல் தோண்ட முற்பட்ட 6 பேர் கைது

Editorial   / 2020 ஜூன் 15 , பி.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

 

மன்னார் - பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேசாலை - யூட்ஸ் வீதி அருகே உள்ள பற்றைக்காட்டுப் பகுதியில், புதையல் தோண்ட முற்பட்ட 6 நபர்கள், பேசாலை பொலிஸாரால், சனிக்கிழமை (13) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து, புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட நவீன கருவியொன்றை, பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் 4 பேர், அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களெனவும் ​ஏனையோர், பேசாலை - நடுக்குடா, வசந்தபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களெனவும், விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

விசாரணைகளின் பின்னர், சந்தேகநபர்கள், நேற்று (14) மாலை, மன்னார் பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவர்களை, பதில் நீதவான் பிணையில் விடுவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .