Niroshini / 2021 டிசெம்பர் 07 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி - உமையாள்புரம், சோலை நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து, பெருந்தொகையான எறிகணைகள் மற்றும் வெடிபொருள்கள் என்பன விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார், இன்று (07) காலை மீட்டுள்ளனர்.
குறித்ர பகுதியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (05), எறிகணை ஒன்றை வீட்டுக்குள் வைத்து கிறைன்டரினல் வெட்டியபோது, குறித்த எறிகணை வெடித்துள்ளது.
இதில், 25 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்ததுடன், 13 வயதுடைய சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர், மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில், ஏற்கெனவே சம்பவம் இடம்பெற்ற வீட்டில் ஒரு சில வெடி பொருள்கள் அனை்றைய தினம் அடையாளம் காணப்பட்டன.
தொடர்ந்து , விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த வீட்டில் இருந்தும் வீட்டு வளவுக்குள் இருந்தும், பெருந்தொகையான வெடிபொருள்கள, இன்று காலை மீட்கப்பட்டுள்ளன
2 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago