2025 மே 16, வெள்ளிக்கிழமை

’பொன் சிவகுமாரனின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது’

Editorial   / 2020 ஜூன் 04 , பி.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையால், போராட்டத்தின் முதல் வித்து பொன் சிவகுமாரனின் 44ஆவது ஆண்டு நினைவு தினம், அன்னாரின் திருவுருவச்சிலை உரும்பிராய் சந்தியில், சனிக்கிழமை (06) முற்பகல் 9.30 மணிக்கு அனுஷ்டிக்கப்படவுள்ளதாக, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், கெரோனா வைரஸ் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, சகலரும் அஞ்சலி செலுத்தும் முகமாகவே, சனிக்கிழமை (06), இந்த நினைவு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாகவும் இம்முறை உரைகள் எதுவும் இடம்பெறமாட்டாதெனவும் கூறினார்.

“ஏற்கெனவே, அஞ்சலி செலுத்தல் இடம்பெறும் பகுதியில், சிரமதானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தொற்று நீக்கியும் தெளிக்கப்பட்டுள்ளது. கலந்துகொள்பவர்கள் முகக்கவசங்களை அணிந்திருப்பது கட்டாயமானதாகும்” எனவும், தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .