Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 செப்டெம்பர் 20 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவரத்தினம் கபில்நாத்
வவுனியா செட்டிகுளம், அடப்பன்குளம் பகுதியில் அமைந்துள்ள விசேட அதிரடிப்படையினரின் முகாமை அகற்றக்கோரி பிரதேச மக்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
செட்டிகுளம், அடப்பன்குளம் பகுதியில் அமைந்துள்ள விசேட அதிரடிப்படையினரின் முகாமுக்கு அமைக்கப்பட்டிருந்த வேலியில், சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தை பாச்சியமையினால், குறித்த பகுதியைச் சேர்ந்த க. இராஜேஸ்வரி என்ற 55 வயதுடைய பெண் உயிரிழந்தார்.
இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) உயிரிழந்த பெண்ணின் இறுத்திக்கியைக் இடம்பெற்றபோது,
செட்டிகுளத்தைச் சேர்ந்த பொது மக்கள், விசேட அதிரடிப்படையினரின் முகாமை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை, இந்த முகாம் அமைந்துள்ள காணி, கிராம அபிவிருத்தி சங்கம், பலநோக்கு கூட்டுறவுச்சங்கம், கமநலசேவைகள் நிலையம், பொது விளையாட்டு மைதானம் என்பன அடங்கிய பிரதேசமாக காணப்படுவதனால், இக்காணியை விடுவிக்கவேண்டும் என்று கோரிய ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், என். சார்ள்ஸ், வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம், வட மகாhணசபை உறுப்பினர்களான எம். பி. நடராஜ், இ. இந்திரராஜா ஆகியோரிடம் மகஜரொன்றையும் கையளித்தனர்.
1 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
7 hours ago