Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 செப்டெம்பர் 25 , மு.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி முகமாலை றோ.க.த.க பாடசாலைக்குரிய காணி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
2000ஆண்டு நிலவிய போர்ச்சூழல் காரணமாக இப்பாடசாலை இயங்கவில்லை. 2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை, முகமாலையில் தனியார் காணியில் தற்காலிகமாக இயங்கி வருகிறது.
தற்போது பாடசாலைக்குரிய சொந்த நிலப்பகுதி விடுவிக்கப்பட்டுள்ளது. கிராமசேவையாளர் மற்றும் பெற்றோரின் ஒத்துழைப்புடன் சிரமதானப் பணிகள் பாடசாலைக்காணியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப்பாடசாலையானது 1958ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. தற்போது பாடசாலைக்குரிய நிரந்தரக் கட்டடம், மலசலகூடம் மற்றும் கிணறு ஆகியன தேவையாக உள்ளதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிலுள்ள முகமாலைக் கிராமத்தில் போர்க்காலத்தில் புதைக்கப்பட்ட மிதிவெடிகள் காரணமாக மீள்குடியேற்றம் முழுமையாக இடம்பெறாத நிலையில் தற்போது இக்கிராமத்துக்குரிய பாடசாலையின் காணி விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
7 hours ago