2025 ஜூலை 09, புதன்கிழமை

முதிரை மரக்குற்றிகள் மீட்பு: இருவர் கைது

George   / 2017 ஜனவரி 06 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

சட்டவிரோதமாக காடுகளில் வெட்டப்பட்ட பெறுமதியான முதிரை மரக்குற்றிகள், வவுனியா புளியங்குளத்தில் வைத்து, புளியங்குளம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான மரம் வெட்டப்படுவதாக கிடைத்த  தகவலையடுத்து, பழையவாடி காட்டுக்கு விரைந்த பொலிஸ் குழு, வெட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட, 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான  23 முதிரை மரங்களை கைப்பற்றியுள்ளது.

புளியங்குளம் பழையவாடியை சேர்ந்த இருவரே, கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .