2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

முதலமைச்சருக்கு ஆதரவாக பேரணி

Princiya Dixci   / 2016 ஜூன் 28 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

- க.அகரன்

'வட மாகாண பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைப்பதற்கு, முதலமைச்சர் முன்வைத்துள்ள யோசனைக்கு அமைவாக, முதலமைச்சரின் கரங்களை பலப்படுத்துவோம்' எனத் தெரிவித்து, வவுனியா விவசாயிகளினால் முன்னெடுக்கப்பட்ட ஆதரவுப் பேரணியொன்று, இன்று செவ்வாய்க்கிழமை (28) முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா காமினி மகா வித்தியாலயத்துக்கு முன்பாகக் கூடிய விவசாயிகள், தங்களது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை தாங்கியிருந்ததுடன், மன்னார் வீதி வழியாக அமைதியான முறையில் பேரணியாகச் சென்று, மாவட்ட செயலகத்தை அடைந்தனர்.

இதன்போது, 'முதலமைச்சரின் கரங்களை பலப்படுத்துவோம்', 'சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்', 'மத்திய அரசே ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையத்தினை அமையவிடு' போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளைத் தாங்கியவாறு, பேரணியில் கலந்துகொண்டிருந்தனர்.

இப்பேரணியில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட மாகாணசபை உறுப்பினர் ஆர்.இந்திரராசா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். இப்பேரணியின் நிறைவில், வவுனியா மாவட்ட மேலதிக மாவட்டச் செயலாளர் தி.திரேஸ்குமாரிடம், பிரதமர் மற்றும் முதலமைச்சரிடம் கையளிப்பதற்கான மகஜர் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .