2025 ஜூலை 09, புதன்கிழமை

முழங்காவில் பகுதியில் வாள்வெட்டு: இரு இளைஞர்கள் வைத்தியசாலையில்

George   / 2016 நவம்பர் 16 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

முழங்காவில் நாச்சிக்குடாப் பகுதி கடையொன்றில் இன்று மாலை  இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக   இளைஞர்கள் இருவர்  வாள்வெட்டுக்கு இலக்காகி  முழங்காவில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

இதனால், குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மீண்டும் மோதல் ஏற்படாமல் தடுப்பதற்கு, முழங்காவில் பொலிஸார்  கண்காணிப்பு கடமையில்  ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பான  மேலதிக தகவல் எதனையும் பெற முடியவில்லை. மேலதிக விசாரணைகளை முழங்காவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .