Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி, அக்கராயன் குளத்தின் பின்பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற மணல் அகழ்வினைக் கட்டுப்படுத்துமாறு அக்கராயன் குளத்தின் கீழான விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அக்கராயன் குளத்தின் நீர் மட்டத்தினை தீர்மானிக்கும் சக்தியாக முல்லைத்தீவு, புத்துவெட்டுவானின் மருதங்குளம் விளங்குகின்றது. மருதங்குளம், பழையமுறிகண்டி ஆகிய கிராமங்களின் ஆற்றுப்படுகைகளில் தொடர்ச்சியாக நடைபெறுகின்ற மணல் அகழ்வு தற்போது அக்கராயன் குளத்தின் பின்பகுதி வரை இடம்பெறுவதினால், மழை காலத்தில் நீர் வரவு குளத்திற்கு குறைவாகவே அமைந்துள்ளது.
மணல் அகழ்வு இடம்பெற்ற குழிகள் நீர் நிரம்பி வழிவதினால், குளத்திற்கு நீர் வர வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களம் ஆகியன நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொடர்கின்ற மணல் அகழ்வினால் அக்கராயன் குளம், பழையமுறிகண்டிக்குளம், அம்பலப்பெருமாள்குளம் என்பவற்றின் நீர் வரவுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கிளிநொச்சி மாவட்டத்தின் இரண்டாவது பெரிய குளமாகிய அக்கராயன் குளத்தின் பின்பகுதியில் தொடர்கின்ற மணல் அகழ்வு குளத்தின் கீழான 4,500 ஏக்கர் நெற்செய்கையினைப் பாதிக்கக்கூடிய நிலைமை தற்போது உருவாகி உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .