Freelancer / 2022 மே 25 , மு.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் மீன்பிடி தொழிலை வாழ்வாதாரமாக நம்பியுள்ள மக்கள் தற்போது தொழிலுக்கு செல்வதற்கு மண்ணெண்ணெய் இல்லாததால் பாரிய சிக்கல்களை எதிர் நோக்குகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் சாலை முதல் கொக்குளாய் வரையான கடற்பரப்பில் 2,000 மீன்பிடிப் படகுகளுக்கு மண்ணெண்ணெய் விநியோகம் என தெரிவு செய்யப்பட்டுள்ள போதும் மண்ணெண்ணெய் சுமார் 18 நாட்களுக்கு மேலாக கிடைக்காததன் காரணமாக தொழிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தங்களுடைய வாழ்வாதார தொழிலுக்காக இந்த மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வந்தாலும், தற்போது மண்ணெண்ணெய் இல்லாததன் காரணமாக தொழிலை மேற்கொள்ள முடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்
குறிப்பாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அதிக விலை கொடுத்து இரவு நேரங்களில் மண்ணெண்ணையை பெற்றுக் கொள்பவர்கள் சட்டவிரோதமாக 400 ரூபா வரையில் மண்ணெண்ணையை விற்பனை செய்கின்றனர் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்
புதுக்குடியிருப்பு புதுக்குடியிருப்பு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 400 பேருக்கும் முல்லைத்தீவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 800 பேருக்கும் நாயாறு எரிபொருள் நிலையத்தில் 800 பேருக்கும் என இந்த எரிபொருள் வழங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் கடந்த 18 நாட்களாக எரிபொருள் இல்லை. இதனால் அனைவருக்கும் இவ்வாறான ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது 400 ரூபாய்க்கு கூட மண்ணெண்ணை வாங்க முடியாத நிலை காணப்படுவதாகவும் எனவே உடனடியாக மண்ணெண்ணையை பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலும், இதுவரை எந்தவித தீர்வும் இல்லாமையால் தொடர்ச்சியாக பாதிக்கப்படுவதாகவும் உடனடியாக அரசு சட்டவிரோத தொழில்களை நிறுத்தி தமக்கான மண்ணெண்ணெய் விநியோகத்தை மேற்கொண்டு தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த வழி சமைக்க வேண்டும் எனவும், இது நடைபெறாத பட்சத்தில் நாளை மறுதினம் முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். (R)
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago