Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஒக்டோபர் 17 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
மார்க் ஆனந்
மன்னார் நகர் மீனவர்கள் மீன்பிடிக்காக கடலுக்குச் சென்று வரும் கால்வாயை திறந்துவிட நடவக்கை எடுக்கும்படி, மன்னார் மாவட்ட செயலாளரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.
இது தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை (16) மன்னார் மாவட்ட செயலாளர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் சம்பந்தப்பட்டோருக்கான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் தீர்க்கமான எந்த முடிவும் எடுக்கப்படவில்லையெனவும் மணலால் மூடப்பட்டிருக்கும் ரயில் பாலப்பகுதியை ரயில்வே திணைக்கள அதிகாரிகளே பார்வையிட்டு செயல் படுத்த வேண்டிய நிலையிருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இவ் கலந்துரையாடல் தீர்வு பெறாத நிலையில் முடிவுற்றதாகத் தெரிவிக்கபடுகிறது.
இதுதொடர்பில் தெரியவருவதாவது,
பனங்கட்டுக்கொட்டு, பள்ளிமுனை, பெரியகடை, உப்புக்குளம், சாந்திபுரம், சவுத்பார் ரயல்வே நிலையம்ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 300க்கு மேற்பட்ட மீனவர்கள் மன்னார் நகர் பாலக் கடற்கரையோரத்திலிருந்து ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ் மீன்பிடியாளர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கு செல்வதென்றால் கடலில் அமைக்கப்பட்டிருக்கும் ரயில்வே பாலத்தை ஊடறுத்தே ஒரு கால்வாய் ஊடாக தென் கடலுக்குச் செல்ல வேண்டிய நிலை உண்டு.
ஆனால், அண்மையில் இந்த ரயில்வே பாலம் புனரமைக்கப்பட்ட வேளையில் இந்த பாலம் நுழைவாயில்கள் மணலால் மூடப்பட்டதனால், கால்வாய் ஊடாக மீனவர்கள் தங்கள் படகுகளை செலுத்த முடியாத நிலையில் சுமார் நூறு மீற்றர் தூரம் பலபேர் சேர்ந்தே படகுகளை இழுத்துச் சென்று தொழிலுக்கு சென்று வரவேண்டிய நிலை காணப்பட்டது.
இக் கடல் கால்வாயை திறந்து விடுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும்படி இவ் மீனவர்கள் மன்னார் மாவட்ட செயலாளருக்கு அண்மையில் மகஜர் வழங்கியிருந்தனர்.
4 hours ago
8 hours ago
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
16 Aug 2025