Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 02 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
இரணைதீவு பகுதியில் குடியேறியுள்ள மக்கள் தொடர்பாகவும், மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் நேரடியாக அறித்து கொள்வதற்காக, யாழ்ப்பாணம், கிளிநொச்சி பிராந்திய மனித உரிமைகள் ஆணைகுழுவின் ஆணையாளர் திரு.கணகராஜ் தலைமையிலான அதிகாரிகள், நேற்று வெள்ளிக்கிழமை (1) மாலை, இரணைதீவுக்கு நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது, மக்கள் நேரடியாக தங்களுடைய முறைப்பாடுகளை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளின் முன்னிலையில் தெரிவித்திருந்தனர்.
குறிப்பாக, இரணைதீவு பகுதியில் குடியேறி ஒரு வருடமாகின்ற நிலையில், இதுவரை தாங்கள் உரிய முறையில் குடி யேற்றப்படவில்லை எனவும் உரிய அதிகாரிகள் அசமந்த போக்குடன் செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அரச திணைக்கள அதிகாரிகள் தமது தீவு பகுதிக்கு வருவது மிக குறைவும் எனவும் எமது பிரச்சினைகள் தொடர்பாக அறிந்து கொள்வது கூட இல்லை எனவும் தெரிவித்தனர்.
அத்துடன், குடிநீர் பெறுவதற்காக தங்கள் தினமும் 5 கிலோமீற்றர் நடந்து செல்ல வேண்டிய நிலை காணப்படுவதாகவும் தெரிவுத்தனர்.
அதேநேரத்தில், தங்களுக்கு தேவையான போக்குவரத்து மற்றும் மருத்துவ தேவைகளையும் உடனடியாக பெற்று தருவதற்கான செயற்பாடுகளையும் மேற்கொண்டு தருமாறு, மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், குறித்த மக்களின் வீடுகள், கோவில், பாடசலைகள் அனைத்திற்கும் நேரடியாக விஜயம் செய்து பிரதிநிதிகள் பார்வையிட்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த யாழ்., கிளிநொச்சி பிராந்திய மனித உரிமைகள் ஆணைகுழுவின் ஆணையாளர் கனகராஜ், இரணைதீவு மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக உடனடியாக நடவடிக்ககைகள் மேற்கொண்டு சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களை அழைத்து அவர்களிடம் விளக்கம் கோரவுள்ளதாகத் தெரிவித்தார்.
அந்த விளக்கத்தின் பின்னர், அவர்களுடைய செயற்பாடுகளை முன்னேடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும், இந்த வருடத்துக்குள் சகல அரச திணைக்களங்களையும் ஒரு நடமாடும் சேவைக்கு அழைத்து இங்குள்ள மக்களின் பிரச்சினைகளை நேரடியாக ஆராய்வதற்கும் திட்டம் ஒன்றை தயாரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், ஏனைய பிரதேசத்தில் மீள்குடியேரிய மக்களுக்கு கிடைக்ககூடிய சகல உரிமைகளும் சகல வசதிகளும் இந்த மக்களை சென்றடைய வேண்டுமெனவும், மீள்குடியேற்றம் தொடர்பில் எடுக்க வேண்டிய சகல நடவடிக்கை தொடர்பிலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவனம் செலுத்துமெனவும், அவர் மேலும் தெரிவித்தார்.
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago