2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மன்னாரில் இயல்பு நிலை ஸ்தம்பிதம்

Freelancer   / 2022 மே 10 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

லெம்பர்ட்

நாட்டில் நேற்று ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைத் தொடர்ந்து நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவுக்கு அமைய இன்றைய தினம் மன்னார் மாவட்டத்தின் இயல்பு நிலை முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

கொழும்பில் அமைதியான முறையில் போராட்டம் மேற்கொண்டவர்கள் மீது நேற்று  அரச தரப்பு ஆதரவாளர்கள் மேற்கொண்ட கடுமையான தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் பதற்ற நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

அரச, தனியார் போக்குவரத்துச் சேவைகள் இடம் பெறவில்லை. பாடசாலைகளும் இடம் பெறவில்லை.

இதனால் மன்னார் மாவட்டத்தின் இயல்பு நிலை முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X