Freelancer / 2022 மே 23 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
லெம்பர்ட்
மன்னாரில் இன்று திங்கட்கிழமை அதிகாலை தொடக்கம் எரிபொருள் நிரப்புவதற்கும் எரிவாயுவை பெற்றுக் கொள்வதற்கும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இன்று அதிகாலை லிற்றோ நிறுவனத்தின் ஒரு தொகுதி எரிவாயு சிலிண்டர்கள் குறிப்பிட்ட சில விநியோகஸ்தர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவற்றை பெறுவதற்கு நேற்று நள்ளிரவும் முழுவதும் மக்கள் வரிசையில் நின்று அதிகாலை எரிவாயுவை பெற்றுச் சென்றனர்.
அதே நேரம், மன்னாரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அதிகளவானவர்கள் எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் காத்திருப்பதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
தொடர்ச்சியாக எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் எரிவாயு விநியோக நிலையங்களில் முரண்பாடுகள் ஏற்படாத வகையில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளனர். (R)
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026