2025 மே 17, சனிக்கிழமை

மன்னாரில் மக்களின் நடமாட்டம் குறைவு

Editorial   / 2020 ஏப்ரல் 28 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தில், இன்றைய தினம் (28) காவல்துறை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட போதும், மக்களுடைய நடமாட்டம் காலை நேரத்தில் சற்று அதிகரித்து காணப்பட்ட போதும் பின்னர்  மிகவும் குறைவாகவே காணப்பட்டது.

இன்று காலை  நாடளாவிய  ரீதியில் குறித்த சில மாவட்டங்களை தவிர ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில், ஊரடங்குச் சட்டம் தளர்த்திக் கொள்ளப்பட்ட போதும் அதிக எண்ணிக்கையான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறவில்லை.

பொருள்களை கொள்வனவு செய்வதற்கும் மக்கள் ஆர்வம் காட்டாமையையும் அவதனிக்கக் கூடியதாக இருந்தது.

மரக்கறி உற்பத்திகளின் விலை குறைவாக காணப்பட்டமையினால் மக்கள் அதிகளவில் மரக்கறி  கொள்வனவில் ஈடுபட்டனர்.

அத்துடன், அரசாங்கத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையில் அத்தியாவசிய பொருள்கள் கொள்வனவுக்கு மக்கள் என வெளியே  வருவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

அதே நேரத்தில், அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றியும்  முகக் கவசங்கள் அணிந்தும் சுகாதார முறைகளை பின் பற்றியமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .