2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மன்னார் சிலாவத்துறை காணி பிரச்சினை: ஆணைக்குழுவில் விசாரணை

Editorial   / 2019 செப்டெம்பர் 24 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

மன்னார் - சிலாவத்துறை காணி பிரச்சினை, வவுனியா மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையில்,  நேற்று  (23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, குறித்த கடற்பகுதியூடாக போதைபொருள்கள் பாரியளவு கடத்தப்படுவதால், குறித்த காணியானது தேசிய பாதுகாப்புக் அவசியமாகக் காணப்படுவதாகத் தெரிவித்த கடற்படையினர், இதனால் குறித்த காணியை சட்ட ரீதியாக கடற்படைக்கு உரித்தக்குவதற்கான செற்பாடுகள் இடம்பெறுவதாகவும் கூறினர்.

 அதேநேரத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நட்டஈடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தருவதாக, பிரதேச செயலகம் சார்பாக தெரிவிக்கப்பட்டது

பாதிக்கப்பட்ட மக்கள் சார்பகவும் மெசிடோ நிறுவனம் சார்பாகவும் முன்னிலையான சட்டதரணி வி. அர்ஜூன், குறித்த காணிகள் மக்கள் பூர்விகமாக வாழ்தததன் அடிப்படையில், அவற்றை விடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், வேறு அரசக் காணிகளைக் கடற்படையினரைப் பயன்படுத்துமாறு விடுத்த கோரிகையை, கடற்படையினர் நிராகரித்தனர்.

இதையடுத்து, பாதிக்கப்பட மக்கள் சார்பாக ஆஜாராகிய பிரதிநிதிகள், காணிகளை பெற்று கொள்ளும் வரை தாங்கள் போராடபோவதாகவும் தெரிவித்தனர்.

இந்த விசாரணையின் போது, வடமேல் மாகாணக் கட்டளைதளபதி ஆஜராகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .