Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எஸ்.றொசேரியன் லெம்பேட் / 2019 பெப்ரவரி 26 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் நீதவானுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட மூதூர் பகுதியைச் சேர்ந்த இரு சந்தேகநபர்களை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறிலில் வைக்க மன்னார் நீதிமன்றம் இன்று (26) செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை பகுதியைச் சேர்ந்த இருவர் மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு நேற்று (25) வருகை தந்த நிலையில் மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளரிடம் சென்று தாம் திருகோணமலை மூதூர் நீதவான் நீதி மன்றத்தில் இருந்து வந்துள்ளதாக தெரிவித்ததோடு போலி ஆவணங்களை சமர்ப்பித்து தாம் மன்னார் நீதிபதியை சந்திக்க வந்துள்ளதாக கோரி மன்னார் நீதவான் ரீ.சரவணராஜாவின் மெய்ப்பாதுகாலருடன் உரையாடியுள்ளனர்.
இதன் போது குறித்த இரு நபர்களும் மன்னார் நீதவான் ரீ.சரவணராஜாவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் உரையாடிவிட்டு நீதிமன்றத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்த நிலையில் மன்னார் நீதிமன்ற பொலிஸார் மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் மன்னார் பொலிஸார் குறித்த நபர்களை கைது செய்து இன்று (26) மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவர் தனது தீய நடத்தையின் காரணமாக நீதிச் சேவை ஆணைக்குழுவினால் சேவையில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
குறித்த நபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
28 minute ago
50 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
50 minute ago
3 hours ago
4 hours ago