2025 மே 05, திங்கட்கிழமை

மன்னார் வளைகுடா கடலில் கிடைத்த அதிஷ்டம்

Freelancer   / 2022 ஜூன் 16 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

லெம்பர்ட்

பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் இருந்து நேற்று 90க்கும் அதிகமான  மீன்பிடி  விசைப் படகுகளில் 1000க்கும் அதிகமான  மீனவர்கள் தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்று, இன்று அதிகாலை(16) கரை திரும்பினார்கள்.

இவ்வாறு கரை திரும்பிய மீனவர்களுக்கு, உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படும் நகரை, பரை, நெத்திலி உள்ளிட்ட மீன்களும் அதே போல் கிளாத்தி, சீலா, மாவுலா, கிளி, பாறை, முண்டகண்ணி பாறை, கட்டா, சூவாரை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன்களின் வரத்தும் எதிர்பார்த்த அளவு கிடைத்துள்ளதால் மீனவர்கள்  மகிழ்ச்சியடந்துள்ளனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X