2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்

Freelancer   / 2023 நவம்பர் 27 , பி.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி - விநாயகபுரம் பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பத்துடன் தொடர்புபட்டவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு கடந்த மாதம் பிணையில்  விடுதலை செய்யப்பட்ட நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 10 மணியளவில் அயலவர்கள் பொலிஸாருக்கு தெரிவித்த தகவலுக்கு அமைய புகையிரத வீதிக்கு அருகில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் கிளிநொச்சி செல்வா நகர் பகுதியில் சேர்ந்த 22 வயதுடைய ஜோன் பிரகாஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான்   பார்வையிட்ட பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் கொலையா, தற்கொலையா என பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X