2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மழையினால் மாணவர்கள் பாதிப்பு

Gavitha   / 2016 நவம்பர் 22 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி முகாலை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் மாணவர்கள், ஆசிரியர்கள் தற்போது பெய்து வரும் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

யுத்தத்தின் பின்னர், கிளிநொச்சி வலயத்தில் மூடப்பட்டிருந்த பாடசாலைகளில் ஒன்றாக இப்பாடசாலை விளங்கிய நிலையில், 2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி இப்பாடசாலை மீள ஆரம்பிக்கப்பட்டு முகமாலையில் தற்காலிக இடத்தில் ஓலையினால் மேயப்பட்ட கொட்டகையின் கீழ் இயங்கி வருகின்றது.

இந் நிலையில், தற்போது பெய்யும் மழை காரணமாக கூரையினால் மழை ஒழுக்குகள் வகுப்பறைகளில் வீழ்வதனால், மழை நீர் சிந்திய வகுப்பறைகளிலேயே மாணவர்கள் கல்வி கற்க வேண்டிய அவலம் காணப்படுகின்றது.

'இது தொடர்பாக பளைக் கல்விக் கோட்டம், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை' என்பது பெற்றோர்களின் முறைப்பாடாக உள்ளது.

மழையினை எதர்கொள்ளக் கூடிய வகையில் தறப்பாள்கள் கிடைக்குமானால் கூரையின் மேல் அதனை விரித்து மழை நீர் சிந்துவதை தவிர்க்க முடியுமெனவும் கடுங்குளிருக்கும் ஈரமான வகுப்பறைகளிலும் மாணவர்கள் கல்வி பயில்வதனால் காய்ச்சல், தடிமன், உடல் நோ போன்ற நெருக்கடிகளை மாணவர்கள் எதிர்கொண்டுள்ளதாக பெற்றோர்கள் தெரிவிப்பதுடன் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனை இப்பாடசாலை தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மீளக்குடியமர்ந்துள்ள பகுதியில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இப்பாடசாலைக்கு உதவி அமைப்புகள் நேரடியாக வருகை தந்து நிலைமைகளை பார்வையிட்டு உதவிபுரிய வேண்டுமெனவும் பெற்றோர்களினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .