Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Freelancer / 2022 ஜூன் 30 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இணைந்து பல மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு, துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவு நகர் பகுதியில் இன்று பெண்கள் பலர் இணைந்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாதைகளை தங்கியவாறு அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதேவேளை. குறித்த சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவரும் மாணவர் ஒருவரும் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு, ஐந்து மாணவர்களுக்கு பிணை வழங்கப்பட்டு, மேலும் பலரை தேடி பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago