2025 மே 05, திங்கட்கிழமை

மீன்களின் விலை கிடுகிடுவென உயர்வு

Freelancer   / 2022 ஜூன் 15 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

லெம்பர்ட்

மண்ணெண்ணெய் இன்மையால் மன்னாரில் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீன்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.

மீன்பிடி நடவடிக்கைக்கு என மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மண்ணெண்ணெய் விநியோகிக்கப் படுவதால், மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது.

அதேநேரம் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாகவும் சந்தையில் மீன் விலை அதிகரித்துள்ளது. 

இதனால் மீனவர்கள் உட்பட வியாபாரிகள், மக்கள் என அனைவரும் பாதிப்படைந்துள்ளனர்.

மீன்பிடி இன்மை மற்றும் மீன் வியாபாரம் தொடர்ச்சியாக குறைந்துள்ள மையினால் மீன் சந்தைகளை குத்தகை ரீதியாக பெற்று நடத்தும் குத்தகைதாரர்கள் வருமானம் இன்றி பாதிப்படைந்துள்ளனர்.

எனவே விரைவில் மீனவர்களுக்கு மண்ணெண்ணெய்யை போதிய அளவில் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாட்டை மேற்கொள்ளுமாறு மீனவர்கள் மற்றும் மீன் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X