Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 17 , பி.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் “வடக்கில் விடியல்” என்ற கட்சி பரப்புரையும் மக்கள் குறையறியும் செயற்பாடுகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கிராமங்களில், கடந்த 3 தினங்களாக முன்னெடுக்கப்பட்டதாக, கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் ரங்கதுஷார தெரிவித்தார்.
இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், இந்தப் பரப்புரை செயற்பாட்டுக்காக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான அநுரபிரிய தர்ஷனயாப்பா, சுதர்ஷினி ஜெயராஜ் பெர்ணான்டோப்பிள்ளை, சுசந்த புஞ்சிநிலமே, ச.கனகரத்தினம், நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டதாகவும், கூறினார்.
இதன்போது, ஸ்ரீ லங்கா பொதுஜனபெரமுன கட்சியின் அங்கத்துவ இணைப்பும் மாவட்ட கிளைச் சங்கம் உருவாக்கமும் இளைஞர் அணிதெரிவும் ஸ்ரீ லங்கா மகளிர் முன்னணி தெரிவும் இடம்பெற்றதாகவும், அவர தெரிவித்தார்.
கிராம மட்டங்களில் உள்ள மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து கொண்டதாகத் தெரிவித்த அவர், அது தொடர்பில் கட்சியின் தலைமைப்பீடத்துக்குத் தெரியப்படுத்தி, குறித்த வேலைத்திட்டங்களை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
14 minute ago
17 minute ago
24 minute ago