Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Freelancer / 2022 ஜூலை 04 , பி.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
இந்திய தமிழக அரசின் உதவியில் வழங்கப்படும் இரண்டாம் கட்ட நிவாரண பொருட்கள் இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினை வந்தடைந்துள்ளன. இதனை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விலநாதன் பெறுப்பேற்றுள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன்,
துமிழக முதலமைச்சரின் அனுசரணையுடன் இரண்டாம் கட்ட அரிசி வந்துள்ளது. 65 ஆயிரம் கிலோ அரிசி கிடைத்துள்ளது. இதனை மிகவும் வறுமைப்பட்ட 6,500 குடும்பங்களுக்கு தலா பத்து கிலோ வீதம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு 2,004 குடும்பங்களுக்கும், துணுக்காய் பிரதேசத்திற்கு 572 குடும்பங்களுக்கும், மாந்தை கிழக்கில் 417 குடும்பங்களுக்கும், ஒட்டிசுட்டான் பிரதேசத்தில் 1023 குடும்பங்களுக்கும், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 1962 குடும்பங்களுக்கும், வெலிஓயா பிரதேசத்தில் 522 குடும்பங்களுக்கும் இந்த அரிசி பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago