Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 மே 17 , மு.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
மே-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுதொடர்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிடமும், கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச்சங்கத் தலைவர் இ.மயூரனிடமும் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அந்த வகையில் மே- 18 நினைவேந்தலின்போது விடுதலைப்புலிகளின் சின்னங்கள் எவையும் பயன்படுத்தக்கூடாது என பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலினை மேற்கொள்வதற்கு பிரதமர் மறுப்புத் தெரிவிக்கவில்லை என்றும், அதேபோல் தாமும் உயிரிழந்தவர்களை நினைவுகூர்வதற்கு எவ்வித இடயூறுகளையும் மேற்கொள்ளமாட்டோம் என்றும் பொலிஸ் பொறுப்பதிகாரியும் தெரிவித்திருந்ததாக இவர்கள் விசாரணையின் பின்னர் குறிப்பிட்டனர்.
இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை எவ்வித அசம்பாவிதங்களுமின்றி நடாத்தி முடிக்கவேண்டும் எனவும் போலிஸ் பொறுப்பதிகாரியால் தெரிவிக்கப்பட்டது.
அதிலும் குறிப்பாக இந்த நினைவேந்தல் நிகழ்விலே விடுதலைப்புலிகளின் சின்னங்கள் பயன்படுத்தப்படாமல் நினைவேந்தல் நிகழ்வை நடாத்துமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
3 hours ago
7 hours ago